Friday 18 May 2012

கனக மஹாலஷ்மி


ஸ்ரீரங்க நாச்சியார்:

Kanaka Mahalakshmi Temple, Vizag, Andhra Pradesh,



விசாகப்பட்டினத்தின் மிகப் பிரபலமான ஆலயம் கனக மஹாலஷ்மி அம்மன் ஆலயம். 
 பருஜிப்பேட்டா என்ற இடத்தில் முன்னர் இருந்த அரண்மனைக்கு பக்கத்தில் இருந்த ஆலயத்தில் உள்ள கனக மஹாலஷ்மிதேவி அந்த ஊரை ஆண்டு வந்த மன்னர் பரம்பரைக்கு சொந்தமாக இருந்ததாம்.. ஆலயம் இருந்த இடத்தில் முன்னர் ஒரு கிணறு இருந்ததாம்..

Margasira Masam festival

ஒரு நாள் அந்த இடத்தை ஆண்டு வந்த மன்னரின் கனவில் தேவி தோன்றி 

தான் அந்த கிணற்றில் முழுகி உள்ளதாகவும் தன்னை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்து பூஜிக்குமாறும் கூற மன்னனும் அவளை வெளியிலெடுத்து அங்கேயே ஆலயம் அமைத்தாராம். 
சில ஆண்டுகளுக்குப் பின் நடுத் தெருவில் உள்ள அந்த ஆலயம் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கருதி பெயர்த்து வேறு இடத்துக்கு மாற்றிய சில நாட்களிலேயே அந்த ஊரில் பெரிய அளவு பிளேகு எனும் கொடிய நோய் பரவி பலர் மடிந்தார்களாம். . 
6_2
ஆகவே அந்த ஆலயத்தை மாற்றியதினால்தான் அது ஏற்பட்டது என சாமியாடிகள் கூற ( குறி கூறுபவர்கள்) அதை மீண்டும் பழைய இடத்துக்கே மாற்றி ஆலயம் அமைக்க நோய் தீர்ந்ததாம். அது முதல் அந்த அம்மனை பிளேகுநோய் தீர்த்த அம்மன் எனவும் அவள் மிகவும் சக்தி மிக்கவள் எனவும் கருதி மக்கள் வணங்குகிறார்கள். 
ஆலய விலாசம் 
Sri Kanakamahalakshmi Ammavari Temple
22-91-6, Buruju Peta
Visakhapatnam
Andhra Pradesh
India
ஸ்ரீ கனகமஹாலக்ஷ்மி-ஆதிலட்சுமி அலங்காரம்
One Crore Mahalakshmi!




Monday 7 May 2012

ஆனந்தமய கணபதி







விநாயகனே வெவ்வினையை வேர் அறுக்க வல்லான்:
விநாயகனே வேட்கை தணிவிப்பான்;-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணில் பணியின் கனிந்து


சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம்